அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் இந்த வாரம்!

அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் இந்த வாரம் நடைபெறும் என நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தவல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பு சபைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள சிவில் சமூக உறுப்பினர்கள் மூவர் குறித்து பெயர்கள் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போதைய பிரதம நீதியரசர் பியசாத் டெப் எதிர்வரும் 12ம் திகதி ஓய்வு பெறவுள்ளதாகவும், குறித்த பதவி தொடர்பிலும் தீர்மானம் ஒன்றினை எட்ட அரசியலமைப்பு சபையானது அதற்கு முதல் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
வரி விலக்களிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சதொச மூலம் வழங்க நடவடிக்கை!
தொற்றா நோய் தொடர்பில் - இலங்கையின் செயற்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
பிராந்தியப் புரிந்துணர்வு, நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – நிதி அம...
|
|