அரசியலமைப்புக்கு முரணாக எவ்வித தீர்வும் வழங்கப்படாது – அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, April 7th, 2022

அரசியல் யாப்புக்கு முரணாக எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படாது என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று முற்பகல் உரைநிகழ்த்திய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலுட’ அரசியல் யாப்புக்கு உட்பட்ட விடயங்களையே ஜனாதிபதி முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றில் பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் வகையிலான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தாமல், வெவ்வேறு பிரச்சினைகள் குறித்து குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அதிருப்தி வெளியிட்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது. சபையின் ஆரம்பத்தில் விசேட அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், நேற்றையதினம் நடப்பு பொருளாதார நெருக்கடி தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

எனினும் சபையில் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினைக் காண்பதற்கான கருத்துக்களை முன்வைக்காது, இந்த சூழ்நிலையிலும் தங்களது அரசியல் நிலைப்பாட்டு ரீதியான கருத்து முரண்பாடுகளில் ஈடுபடுகின்றமை குறித்து அதிருப்தியடைவதாக சபாநாயகர் கூறினார்.

இந்த நிலையில்  விவாதகாலத்தில் பொருத்தமான விடயப்பரப்பு குறித்து ஆராயப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

.000

Related posts: