அரசியலமைப்பில் இருந்து 18ம், 19ம் திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் – ஜனாதிபதி !

Monday, June 24th, 2019

சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசியலமைப்பிலிருந்து 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் சர்வதிகாரத்திற்கு வழிகோலியதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 19ஆம் திருத்தத்தின் ஊடாக, நாடு ஸ்திரத்தன்மையை இழந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: