அரசிடமிருந்து தீர்வு கிடைக்கவில்லை : ரயில்வே தொழிற்சங்கம்!

Thursday, August 9th, 2018

அரசாங்கத்திடமிருந்து தமது போராட்டத்துக்குரிய தீர்வு இதுவரையில் கிடைக்கவில்லையென ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட அறிவித்துள்ளார்
இதற்கு முன்னர் ரயில்வே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாது இருந்தோரும் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இன்றைய(09) தினம் எவ்வித ரயிலும் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படவோ கொழும்பு – கோட்டை நோக்கி வரவோ இல்லை எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கலந்துரையாட பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து சங்கங்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: