அரசாங்க வேலை பெறுவதற்காக இலஞ்சம் வழங்கினால் தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, September 2nd, 2020

அரச வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் இலஞ்சம் வழங்குவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு கோரியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் – தொழில் பெறுவதற்காக எவரும் இலஞ்சம் வழங்கினால் அவர்களுக்கு தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆத்துடன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் செயலணி ஒன்று அமைத்து வறுமையில் வாடும் குடும்பங்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: