அரசாங்க மருத்துவ அதிகாரிகளது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Thursday, December 1st, 2016

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று(30) காலை 8.00 மணி முதல் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் இன்று(01) காலை 8.00 மணியுடன் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஊடாக அரசாங்க சேவை மற்றும் சுதந்திர சுகாதார சேவைக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த இந்த அடையாள வேலை நிறுத்தம் காரணமாக நேற்றைய தினம் மருத்துவமனைகளில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

மேலும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இடை மருத்துவ சேவை கூட்டு முன்னணியும் நேற்று காலை 8.00 முதல் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

எனினும் இந்த வேலை நிறுத்தத்தால் சிகிச்சைக்காக வந்த நோயாளர்களே கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

GMOA

Related posts: