அரசாங்க நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு; சுகாதார அமைச்சு விசேட சுற்று நிருபம்!

Wednesday, January 18th, 2017

அரச நிறுவனங்களில் டெங்கு குடம்பிகள் பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சகல அமைச்சுக்களையும் கோரியுள்ளார். இது தொடர்பில் சகல அமைச்சு செயலாளர்களுக்கும் அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந்த வேலைத் திட்டம் தொடர்பில் அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதானிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதுடன் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தள்ளார்.

இதற்கிணங்க இந்த வேலைத் திட்டத்தை அந்தந்த நிறுவனங்களே றேகொள்ளவுள்ளன. அதனையடுத்து 25,26,27ம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் சகல அரச நிறுவனங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2016ம் ஆண்டில் 54,727 பேர் மாத்திரம் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. அவற்றில் இறந்தோர் தொகை 78 ஆகும். கடந்த வருட ஆய்வு தரவுகளின்படி நாடெங்கிலுமுள்ள அரச நிறுவனங்களில் நூற்றுக்கு 65 வீதமும், மத ஸ்தானங்களில் நூற்றுக்கு 70 வீதமும், பாடசாலைகளில் நூற்றுக்கு 70 வீதமும், பாடசாலைகளில் நூற்றுக்கு 60 வீதமும், நிர்மாணப் பணி நடைபெறும் இடங்களில் நூற்றுக்கு 58 வீதமும் டெங்கு நுளம்பு பரவும் இடங்கள், அதிகமாக காணப்பட்டதாகவும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.2017ம் ஆண்டில் கடந்த 17 நாட்களில் டெங்கு நோயாளிகள் 1311 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

Sri-Lanka-health-ministry

Related posts: