அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை!

இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை அதிகரித்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு சேவை பிரிவுகளினால் பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால் இந்த கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிக்குமாறு வேறு சேவை பிரிவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கையை செயற்படுத்த முடியுமா இல்லையா என்பது தொடர்பில் இதுவரையில் ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விதை உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுசாலை ஸ்தாபிப்பு!
அபாய இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்!
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொலிஸார் வெளியேற வேண்டாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவச...
|
|