அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 57 ஆக குறைப்பு – நிதியமைச்சின் செயலாளர் அதிரடி அறிவிப்பு!

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் செய்து அதனை 57 வயதாக குறைத்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனை இன்று அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லை முன்னர் 60 ஆக காணப்பட்டது தற்போது அது 57 ஆக குறைக்கப் பட்டுள்ளது என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அரசதுறையில் தொடர்ந்தும் பணியாற்ற விரும்புபவர்கள் ஐந்து வருட நீடிப்பை கோரவேண்டும் அவர்கள் 62 வயது வரை பணியாற்றலாம் எனவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவ்வாறு ஐந்து வருட நீடிப்பை கோரியவர்கள் இடையில் ஓய்வு பெற விரும்பினால் மூன்று மாத அறிவிப்புடன் தங்கள் சேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
57 வயதிற்கு மேல் அரச சேவையில் பணியாற்றுவதற்கான உடல் ரீதியான தகுதி இல்லாதவர்கள் சேவை நீடிப்பை கோரினால் குறிப்பிட்ட திணைக்களத்தின் தலைவர் அவர்களது வேண்டுகோளை பரிசீலனை செய்து அவர்களுக்கு நீடிப்பை வழங்குவது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கான உடல் தகுதியை இழந்துவிட்டார் என திணைக்களத்தின் தலைவர் கருதினால் குறிப்பிட்ட ஊழியருக்கு ஆறு மாத நீடிப்பை வழங்கலாம் எனவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|