அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவை குறித்து முறைப்பாடு!

Friday, September 23rd, 2016

அரசாங்க உத்தியோகத்தர்கள் உரியவாறு தமது சேவைகளை நிறைவேற்றுவதில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கூறியுள்ளார். கல்வித்துறை, பொலிஸ் மற்றும் பிரதேச செயலங்களில் சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலேயே முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களால் ஏற்படும் இதுபோன்ற அசௌகரியங்களை தவிர்ப்பதுடன், வினைதிறனான அரச சேவையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

c-9-310x165

Related posts: