அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை – கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகளும் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

அரசாங்கம் கொரோனா தொற்றுநோயுடன் எதிர்த்துப் போராடும் அதேவேளை, நாட்டில் அபிவிருத்திப் பணிகளையும் தடையின்றி முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறியளவிலான கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுடன் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து பாரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களையும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கண்காணிப்பார் எனவும் அவரது ஊடகப்பிரிவு வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை, உள்ளூர் பொருளாதாரக் கொள்கை மற்றும் உலகளாவிய தொற்றுநோய் ஆகியவற்றுக்கு அமைய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் பல துறைகள் மீதான கட்டுப்பாடு பொருளாதாரத்தை பாதித்திருப்பதால், அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்க உதவும் தற்போதைய கட்டுப்பாடுகளை இலங்கை விரைவில் அகற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|