அரசாங்கத்தை எச்சரித்துள்ளது மருத்துவ நிபுணர்கள் பேரவை!

Tuesday, June 12th, 2018

நாட்டின் மருத்துவ நிபுணர்கள் பேரவை பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு தனியார் மருத்துவ சேவையில் ஈடுபடுவதில்லை என பேரவையின் தலைவர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களிடம் அறவிடப்படும் 24 சதவீத வரியை 12 சதவீதத்தால் குறைக்குமாறும் அவ்வாறு வரி குறைக்கப்படாவிடின் இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts: