அரசாங்கத்தைக் கவிழ்க்க இடமளிக்கப்படாது – ஜனாதிபதி!

Tuesday, March 14th, 2017

நிர்ணயிக்கப்பட்ட கால எல்லை நிறைவடைய முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்க்க இடமளிக்கப்படாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணைக்கு அமைய, நிர்ணயிக்கப்பட்ட காலப் பகுதியில் அரசாங்கத்தின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெல்லவாய மக்கள் விளையாட்டரங்களில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts: