அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – சபாநாயகரிடம் கையளித்தது J.V.P!

Tuesday, May 21st, 2019

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியால் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

Related posts: