அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை – புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, April 8th, 2022

அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணையைக் கொண்டுவர உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

குறித்த அவநம்பிக்கைப் பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிய அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றையதினம் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரமளவில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்..

இது இவ்வாறிருக்க நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் நாடாளுமன்றம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.

அவரது இந்த கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: