அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழு தீர்மானம்!

Thursday, March 7th, 2024

மாகாண அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை மத்திய அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொதுச்சேவை ஆணைக்குழு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண பொதுச் சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற அதிகாரி ஒருவரின் கோரிக்கையை மத்திய அரசில் உரிய பதவிக்கு மாற்றலாம் என்று 2020 ஆம் ஆண்டு பொதுச் சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நியமன அதிகாரியினால் உரிய இடமாற்றங்களை வழங்குமாறு மேற்படி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2020 ஜனவரி 30 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை பொதுச் சேவை ஆணைக்குழு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியமும் கருத்திற்க...
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் அடையாள இலக்கம் - இன்று முதல்ஆரம்பம் என ஆட்பத...
சர்வதேசம் இன்று பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. - நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என ந...