அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க முடியாது – அமைச்சர் கயந்த கருணாதிலக்க!

Thursday, March 9th, 2017

 

எதிரணி உறுப்பினர்களின் செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க முடியாது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எதிரணி உறுப்பினர்கள் சிலர் நேற்று பாராளுமன்றத்தில் நடந்துகொண்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தனது கவலையை தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பாராளுமன்ற கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயங்களை குறிப்பிட்ட அமைச்சர் எதிரணி உறுப்பினர்கள் தாம் இழந்த அதிகாரத்தையும், சலுகைகளையும் மீளப் பெறும் அவசரத்தில் செயற்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

சில அங்கத்தவர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சபாநாயகரின் உத்தரவையும் மதிக்காமல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று பாராளுமன்ற அமர்வுகளை பல தடவைகள் பிற்போடும் நிலைமை உருவானதென அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: