அரசாங்கத்தின் முக்கிய முன்னேற்றங்கள், திட்டங்கள் தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களுக்கு விளக்கம்!
Tuesday, April 11th, 2023பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அரசாங்கத்தின் முக்கிய அபிவிருத்திகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களுக்கு விளக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் வெளிவிவகார அமைச்சின் வளாகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
தற்போதைய பொருளாதார நிலைமை, நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், உத்தேச உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு பொறிமுறை மற்றும் நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்ட பரந்த பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து தூதுக்குழு தலைவர்கள் புதுப்பிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தாமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|