அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Monday, October 30th, 2017

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரி குறித்து அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் குறித்து நேற்றைய தினம் எமது சங்கம் கலந்தாலோசித்தது.இன்றைய தினம் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் தொடர்பான, அதிகாரபூர்வ நிலைப்பாடு வெளியிடப்படும்.அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் தொடர்பான அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.இந்த விடயங்கள் தொடர்பில் நிறைவேற்றுக்குழு தீவிர கவனத்தை செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக விசாரணை இடம்பெறுகின்றது - ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி அமைச்ச...
குழந்தைகளில் 20 வீதமானோர் நிறை குறைவாக உள்ளனர் - குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரி...
அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் துரிதமாக தீர்வு காண்பே...