அரசாங்கத்தின் கொள்கை உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் 9 -10ஆம் திகதிகளில்!

Sunday, February 5th, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆற்றப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும், 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 9ஆம் திகதி முற்பகல் 9.30க்கு நாடாளுமன்றம் கூடி, கடந்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்பட்ட 51 யோசனைகளுக்கும் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: