அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அரச அதிகாரிகளைச் சாரும் – ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டு!
Tuesday, April 20th, 2021நாடொன்றில் இறைமை ஊடாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு சகல அரச அதிகாரிகளையும் சாரும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வெகுஜன ஊடக அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து கூறுகையில் –
அதிகாரிகளின் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களுக்கும் அரசியல் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதோடு, அரச பொறிமுறையை வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்லும் பணியையும் அவர்கள் நிறைவேற்றுவது அவசியமாகும்.
‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற வேலைத்திட்டம் ஒரு கட்சியை அல்லது குழுவைச் சார்ந்ததல்ல என்றும் அது நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை உள்ளடக்கியதாகும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
VAT வரி திருத்தத்திற்கு எதிராக மீண்டும் வழக்கு?
உயர்தர வகுப்புக்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு!
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது – துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!
|
|