அரசமைப்பு நிர்ணயசபை சட்டத்துக்கு முரணானது – முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச!
Friday, November 3rd, 2017
அரசமைப்பு நிர்ணயசபை அரசமைப்புக்கு முரணானதும் அதிகாரமற்றதுமாகும் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்..
1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையிலிருக்கும் அரசமைப்புக்கு இணங்க நாடாளுமன்றத்தில் அரசமைப்பு நிர்ணயசபையை நியமிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரசமைப்பு வழிகாட்டல்சபை மற்றும் அரசமைப்பு நிர்ணயசபை என்பன அரசமைப்புக்கு முரணானது என்பதோடு அதிகாரமற்றது என்றார்
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றம் அரசமைப்பு நிர்ணயசபையாக மாற்றப்படும் போது நீதி அமைச்சராக இருந்த விஜயதாச இது தொடர்பில் எந்தக் கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கண்டியில் ஏற்பட்ட பதற்றத்தால் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம்!
ஜனாதிபதி தேர்தல்: யாழ்ப்பாணத்தில் 5 லட்சத்து 64 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி !
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை குற்றிகள் கைதடியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்பு!
|
|