அரசதுறை ஊழியர்களும் நாட்டின் அரசியல்வாதிகளும் ஒரு சுமையாக பொதுமக்கள் கருதுகின்றனர் : அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Saturday, January 15th, 2022

அரசதுறை ஊழியர்களும் நாட்டின் அரசியல்வாதிகளும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளனர் என்பது பெரும்பான்மையினரின் கருத்து என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பொறிமுறை பற்றிய பொதுமக்களின் பார்வையை மாற்றுவதற்கு அனைத்து அரசதுறை ஊழியர்களும் அரசியல்வாதிகளும் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இவ்வாறு கறிப்பட்ட அவர் மேலும் கூறுகையில் -.

7% பொதுமக்கள் அரச துறையின் ஒரு பகுதியாக உள்ளனர். இது கணிசமான பங்கைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றம் வரை சுமார் 9 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச துறைக்குள் செயற்படும் போது, நேர்மையாக இருப்பதற்கும் பொறுப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் பொது நிதியைப் பயன்படுத்தும்போது திறமையாக இருக்க வேண்டும், பொதுச் சொத்துகளை மதிக்க வேண்டும். மாற்றங்களுக்கேற்ப இலங்கையர்கள் கால அவகாசம் எடுப்பது பாரிய பிரச்சினையாகும் எனவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாட்டின் மின் உற்பத்தித் துறையின் இதயமாக மாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: