அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

இரண்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கோரி அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மாகாண சுகாதார சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமராநந்த வடுகே குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தில் பணியாற்றிய 11 சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், உடன் அமுலுக்கு வரும் வகையில் அந்த இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை சில மாகாணங்களில் பணியாற்றும் சுகாதார துறைக்கான சாரதிகளின் நியமனங்களை நிரந்தரமாக்குமாறும் வலியுறுத்தப்பட்டமைக்கு அமைவாக மாகாண அதிகாரிகள் செயற்படவில்லை எனவும் அகில இலங்கை மாகாண சுகாதார சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமராநந்த வடுகே தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இதற்கான பணிப்புரைகளை விடுத்துள்ள நிலையில் மாகாண அதிகாரிகள் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.எனவே உடன் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார துறை சாரதிகளுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறும் அகில இலங்கை மாகாண சுகாதார சாரதிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
|
|