அம்பாறையில் ஆகக்கூடுதலான வேட்புமனுக்கள் நிராகரிப்பு !

Saturday, December 16th, 2017

ஆகக்கூடுதலான வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.  இந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுகின்றது.

இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் கையளிக்கப்பட்டதும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் திகதி குறித்து அறிவிப்பார். வேட்புமனுக்கள் இரண்டு கட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டபோதிலும் தேர்தல் ஒரேதினத்திலேயே நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: