அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Thursday, May 12th, 2022

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக இதுவரையில் 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள் மூலம் மக்கள் குழுக்களை திரட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியதாக கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 000

Related posts: