அமைதியின்மையால் வீடுகளை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, November 30th, 2022

நாட்டில் கடந்த மே மாதம்முதல் ஏற்பட்ட அமைதியின்மையால் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கலல்கொடவில் உள்ள வியத்புர வீடமைப்புத் திட்டத்தில் அவர்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடுகள் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அதில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மாத வாடகை வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வளாகத்தில் 106 வீடுகள் உள்ளதாகவும் வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவைப்பட்டால், அந்த வீடுகளில் வசிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கலாம் என்றும் அவர்களது நிரந்தர வசிப்பிடமாக அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: