அமைச்சு பதவிகள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, September 14th, 2022

இலங்கை கிரிகெட் அணியின் ஆசிய கிண்ண வெற்றிக்கு காரணம் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாமல் ராஜபக்சவிற்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு அவர் தகுதியானவர் என்பதற்கான பல பெறுபேறுகளை நாங்கள் தற்போது கண்டிருக்கின்றோம். அரசியலுக்கு அப்பால் சென்று விளையாட்டு துறைக்கு அவர் பல விடயங்களை செய்துள்ளார்.

அவர் சுயாதீனமாக செயற்பட்டு நாடளாவிய ரீதியிலுள்ள திறமையான வீரர்களை ஒரு இடத்திற்கு கொண்டு வந்தார். விசேடமாக ஹம்பாந்தொட்டை பிரதேசத்திலுள்ள திறமையான வீரர்களை இனம்கண்டு அவர்களுக்கு விளையாட்டு சமூகத்தை அறிமுகப்படுத்தி, பாரிய சேவைகளை ஆற்றியுள்ளார்.

அவரது 2 வருட உழைப்பின் பிரதிபலனாகவே கிரிகெட் ஆசிய கிண்ண வெற்றி கிடைத்துள்ளது.

நாமல் தமது உறவினர்களையோ தமக்கு நெருங்கியவர்களையோ விளையாட்டு துறையில் ஈடுபடுத்தவில்லை. அவர் சுயாதீனமாக செயற்பட்டு திறமையான அனைத்து வீரர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தார்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை

தனக்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தனக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கோரி்க்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாமல் விடுத்துள்ளார்.

சமகால அரசாங்கத்தில் தான் எவ்வித அமைச்சு பதவிகளையும் ஏற்காமல் நாட்டை கட்டியெழுப்ப உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தான் ஆதரவு வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: