அமைச்சர் ஹக்கீமின் தாயார் காலமானார்!

Friday, September 22nd, 2017

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தாயார்  ஹாஜரா உம்மா தனது 89 ஆவது வயதில் காலமானார்.

அவர் கடந்த சில நாட்களாக கடும் நோய்வாய்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஜனாஸா, கொழும்பு-3. கொள்ளுப்பிட்டி, 20/1, அல்பேட் பிளேஸில் உள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீனின் வாசஸ்தலத்திலிருந்து, கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கு நாளை (23) சனிக்கிழமை காலை 10 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.

மறைந்த ஹாஜரா உம்மா, முன்னாள் அதிபர் மர்ஹூம் என்.எம்.ஏ. ரவூப்பின் மனைவியும், டாக்டர் ஹபீஸ், ரவூப் ஹஸீர், ரவூப் ஹக்கீம், ஹஸான், ஹஸார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். ஹபுகஸ்தலாவை பிறப்பிடமாகக்கொண்ட இவர் தனது கணவர் கடமையாற்றிய தெஹிதெனிமடிகே, கலாவெவ, ஹோராப்பொல, தம்பாலை, ஆகிய கிராமங்களிலும் வசித்து வந்திருக்கிறார்.

இவர், அரபுத் தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அரபுத் தமிழை வளர்க்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு  இவர் வலியுறுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: