அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் – அரச தலைவர் கோட்டாபய உத்தரவு!

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
விமான சேவைகள் அமைச்சு தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறு அரச தலைவர் உத்தரவிட்டுள்ளதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, விசாரணைகள் நிறைவடையும்வரை அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகுவார் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விசாரணையை தொடர அனுமதிக்கும் வகையில், அமைச்சர் பதவியை உடனடியாக விட்டு விலகுவதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|