அமைச்சர் டக்ளஸ் முயற்சி – காப்பெற் வீதியாக பரிணமித்தது கோணாந்தோட்ட வீதி!

Wednesday, March 3rd, 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் யாழ்.மானிப்பாய் வீதியையும் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியையும் இணைக்கும் கோணாந்தோட்ட வீதி காப்பெற் வீதியாக செப்பனிடப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் பிரகாரம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் யாழ்ப்பாணம்  மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான வீதிகள் முன்மொழியப்பட்டு அத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு செப்பனிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கோணாந்தொட்ட வீதிக்கான காப்பெற்றிடும் பணிகள் இன்றையதினம் இடப்பெற்றன.

குறித்த அபிவிருத்தி முன்னெடுப்புக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் இளங்கோ நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்

அமைச்சரின் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த மக்கள் நலன் மிக்க சேவையை குறித்த பிரதேச மக்கள் பாராட்டியதுடன் அவருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: