அமைச்சர் டக்ளஸ் முயற்சி – நெடுந்தீவில் முதற்தடவையாக கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Wednesday, August 4th, 2021

யாழ் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில்வாழும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவந்த நிலையில் நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டிருந்த தாமதங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்வுகளை பெற்றுக்கொடுதுள்ளார்.

அதனடிப்படையில் இன்றையதினம் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை வேலணை சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் தொற்றாளர் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருவதை சகாதார பிரிவினர் சுட்டிக்காட்டிவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அண்மையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் சீன மக்கள் குடியரசு நன்கொடையாக வழங்கிய 16 இலட்சம்  சினோபார்ம் தடுப்பூசிகளை கையளித்திருந்தார்.

இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்துறை, கோப்பாய், மருதங்கேணி, நல்லூர், பருத்தித்துறை, தெல்லிப்பளை, உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவந்தன.

இந்நிலையில் இன்றையதினம் முதற் தடவையாக நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு குறித்த தடுப்’பூசி வழங்கப்பட்டது.

இதேவேளை குறித்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்டகையை இன்றுடன் நிறுத்தவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச மக்களின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் உரையாடியதன் அடிப்படையில் நாளையதினமும் தடுப்பூசிகளை செலுத்தவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை அவதானிக்கும் பொருட்டு வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக்’ கட்சியின்  முக்கியஸ்தர்கள் நெடுந்தீவக்கான பயணத்தை மேற்கொண்டிருந்ததுடன் மக்களுக்கு தடுப்பூசி தொடர்பில் விழிப்புணர்வுகளை  வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: