அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை – கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை நடைமுறையில்!

Thursday, December 2nd, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பொலிஸ் திணைக்களம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் என்பன இணைந்து பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக போலிசார் வீதிகளில் ஏற்படுகின்ற தவறுகளை குறைப்பதற்காக போக்குவரத்து கண்காணிப்பு பொலிசாரை வீதியின் இருமருங்கிலும் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் ஈடுபட வைத்துள்ளதுனர்.

அத்துடன் பாடசாலைகள் மற்றும் முக்கியமான பகுதிகளில் தொடர்ச்சியாக போலிசாரின் பங்களிப்புடன் வீதி விபத்துகளை குறைப்பதற்காக செயற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

முன்பதாக கிளிநொச்சியில் அடிக்கடி ஏற்பட்டுவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு சுற்றுவட்டம் அமைப்பதோ, சமிக்ஞை விளக்குகள் பொருத்துவதோ காலதாமதமாகலாம் என்பதால், உடனடியாக பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து வீதிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் உத்தரவிட்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்ற நிலை தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்றை கடந்த 27 ஆம் திகதியன்று நடத்திய கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இந்நிலையில் தற்போது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: