அமைச்சர் டக்ளஸ் நிதி ஒதுக்கீடு – வலி தெற்கு பகுதி விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Thursday, March 17th, 2022

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் அமைச்சர் டக்ளஸ’ தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் வலிகாமம் தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறிவொளி விளையாட்டு கழகம், ஞானகலா விளையாட்டு கழகம், ஒளிநிலா விளையாட்டு கழகம், காளியம்பாள் விளையாட்டு கழகம், ஞானமுருகன் விளையாட்டு கழகம் ஆகியவற்றுக்கு குறித்த உபகரணங்கள் வழங்கிகைக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாவலி தெற்கு பிரதேச நிர்வாகத்தினரின் முன்மொழிவுகளுக்கமைய கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த நிதி ஒதுக்கப்பட்டு உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் மற்றும் பிரதேச செயலர் துறைசார் அதிகாரிகளுடன் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக பொறுப்பாளர் அருணாசலம் சந்திரன் – வலன்ரயன் கட்சியின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உதவி திட்டத்தை பயனாளர்களிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: