அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – நெடுந்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

வருடாந்த தேசிய கடற்தொழில் தினத்தை முன்னி்ட்டு கடற்தொழில் அமைச்சினால் பல்வேறு மக்கள் நலன்சார் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கமைய விசேட ஏற்பாட்டின் ஊடக பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.
குறிப்’பாக பொருளாதார ரீதியில் பாதிப்பகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களின் நலன்களை கருதி அத்தகைய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை உக்குவிக்கும் நோக்குடனேயே குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் நெடுந்தீவு பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 8, பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்றையதினம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அமைச்சர் சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி மற்றும் வேலணை பிரதேச முன்னாள் தவிசாளர் சின்னையா சிவராசா போல் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கற்றல் உதவி உபகரணங்களை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|