அமைச்சர் டக்ளஸ் நடடிக்கை – முழங்காவில் பிரதேச மருத்துவ மனைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Sunday, August 25th, 2024

முழங்காவில் பிரதேச மருத்துவமனை வைத்தியர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் இவ் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சமயம் பொறுப்பதிகாரி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த  உபகரணங்கள் உடனடியாக கொள்வனவு செய்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் பூநகரி தெற்கு பிரதேச அமைப்பாளர் தோழர் ஜெகநாதன் முழங்காவில் வட்டார அமைப்பாளர் உதயசங்கர் மருத்துவமனை வைத்தியர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

000

Related posts: