அமைச்சர்’ டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – குருநகர் மற்றும் கொழும்புத்துறை கடற்கரை வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணி முன்னெடுப்பு!

Saturday, November 6th, 2021

குருநகர் மற்’றும் கொழும்புத்துறை கடற்கரை பகுதி வீதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் மின் விளக்குகள் பொருத்தும் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

கடற்றொழிலாளர்களது தொழில் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக குறித்த பகுதிக்கு மின்விளக்ககள் பொரத்தி தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் றீகன் – இளங்கோவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு வீதி மின் விளக்குகளை பொருத்துவதற்கான நிதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒதுக்கியிருந்த நிலையில் குறித்த திட்டம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்ட குறித்த பகுதி மக்கள் மின்விளக்குகள் பொருத்தப்பட்டதை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அவரது மக்கள் நலன்சார்  சேவைக்கும் தமது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: