அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அச்சமின்றி சேவையை முன்னெடுக்க முடிந்துள்ளது – வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் புவி தெரிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் இருந்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் தமக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது தமது பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் கிருஸ்னன் புவி இதற்காக அமைச்சருக்கு தமது நன்றியை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பித்ர்ள்ளதால் தமது பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாமையால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் சாலையின் செயற்பாடுகளும் முடங்கும் நிலையும் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதத்துக்கு முன்னர் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு மக்களுடன் நெருக்கமான தொடர்பை பேணுபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டது.
ஆனாலும் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வடக்கு மாகாண சாலை ஊழியர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் எமது சேவையும் ஊழியர்களது பாதுகாப்பை மட்டுமல்லாது பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் கொரோனா தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவது அவசியம் என்றும் இதில் சுகாதார தரப்பினரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்ததுடன் அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம்.
இந்நிலையில் தற்போது சீன மக்கள் குடியரசு ஜனாதிபதியிடம் வழங்கிய 16 இலட்சம் தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கென வழங்கியிருந்தார்.
இடையடுத்த தற்போது தற்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில் எமது சாலை ஊழியர்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் எமது கோரிக்கைக்கு செவிசாய்த்து தடுப்பூசிகளை பெற்றுத்தந்து எமது போக்குவரத்து சேவையை பாதுகாப்பாக முன்னெடுக்க வழிவகை செய்துதந்த ஜனாதிபதி கோட்டபய ரஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு தமது நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|