அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி – வேலணைப் பிரதேசசபை கடைத்தொகுதிக்கு மேலதிகமாக 15 மில்லியன் ஒதுக்கீடு!

Saturday, April 24th, 2021

வேலணைப் பிரதேச நகர்ப்பகுதியில் உள்ள கடைத் தொகுதியை நவீனமுறையில் அமைப்பதற்கு மேலதிகமான நிதி கிடைத்துள்ள நிலையில், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கின் ஆளுநர் திருமதி சார்ளர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக பிரதேச இணைப்பாளர் வேலும்மயிலும் குகேந்திரன் ஜெகன் அகியோருக்கும் வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் ஏகமனதாக தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

வேலணை பிரதச சபையின் மாதாந்த அமர்வு நேற்று உதவி தவிசாளர் நடனசிகாமணி தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலணைப் பிரதேச கடைத் தொகுதியை நவீனமுறையில் அமைப்பதற்காக உலக வங்கியால் ஒரு கோடி ரூபா வேலணைப் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த தொகை நவீன கடைத்தொகுதியினை அமைப்பதப்பதற்கு போதுமானதல்லவென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைச்சரின் முயற்சியால் வடக்கு மாகாண ஆளுநரால் மேலதிகமாக 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வேலணை வங்களாவடி பகுதியில் அமைக்கப்படவுள்ள கட்டிடத் தொகுதியில், கீழ்த்தளத்தில் 13 கடைகளும் மேற்தளத்தில் 14 கடைகளும் அதற்கு மேல் பொது மண்டபம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

அதற்கு உலக வங்கியினால் வழங்கப்பட்ட நிதி போதாத நிலையில், பிரதேசசபையின் அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என்று சபை உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் முனவைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியதன் பலனாக, மேலதிகமாக 15 மில்லியன் ரூபாவை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் உள்ளூராசி அதிகார சபைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: