அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்படுகின்றது கோப்பாய் – இருபாலை பழைய வீதி!

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான நாடுதழுவிய ரீதியான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கோப்பாய் – இருபாலை பழைய வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கிராமிய வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கோப்பாய் பிரதேசத்தில் உள்ள பல வீதிகளையும் புனரமைக்க வேண்டும் என குறித்த பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் இராமநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|