அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு சிந்தனை இன்று யாழ் நகரில் தலைநிமிர்ந்து காட்சியளிக்கிறது – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பெருமிதம்!

Wednesday, November 25th, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள  யாழ்ப்பாண கலாசார மண்டபத்தை யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் பார்வையிட வேண்டும் என்று கடந்த மாதாந்த கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரேரித்திருந்தார். குறித்த கோரிக்கை சபையின் ஏகாதிபத்த ஆதரவை பெற்றதனை தொடர்ந்து, சபை உறுப்பினர்கள் கலாசார மண்டபத்தினை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டனர்

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் சென்ற உறுப்பினர்களோடு, யாழ். மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, கலாசார மண்டபத்தின் அதிகாரிகள் அங்கு அமைந்துள்ள கட்டடங்கள், அரங்குகள் பற்றி விளக்கமளித்ததோடு, அங்குள்ள சகல பகுதிகளையப் பற்றியும் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாசார மண்டபத் தொகுதியினுள் அமைந்துள்ள மூன்று கட்டடத் தொகுதிகள் மற்றும் 11 மாடிகளைக் கொண்ட பயிலரங்கு, தளங்களையும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

இது தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி பற்குணரா கருத்துத் தெரிவிக்கையில் ௲

யுத்தம் நிறைவுக்குகொண்டுவரப்பட்ட பின்னர் அன்றைய ஜனாதிபதியாக இருந்த இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவையில் அதிகாரம் மிக்க அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் முயற்சியால் வடக்கின் அபிவிருத்திப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துவந்திருந்தனர்.

இந்நிலையில் அழிந்த தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தில் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்றைய ஜனாதிபதியுடன் இந்தியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றுமுன்னாள் நிதி அமைச்சர் பா. சிதம்பரம் ஆகியோருடன் தனது தற்துணிவான கோரிக்கையாக 50 ஆயிரம் வீடுகள், துரையப்பா விளையாட்டு அரங்கு, பனை அபிவிருத்தி நிலையம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, மற்றும் விவாசாய உழவு இயந்திரங்கள், புதிய ரக பழச்சசெடிகள் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் யாழ்ப்பாணத்தில் தமிழரின் கலாசாரத்தை  பறைசாற்றும் வகையில் ஒரு கலாசார மண்டபத்தையும் அமைத்துத் தருமாறு கோரியிருந்தார்.

குறித்த கோரிக்கை அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்டந்து இந்த கலாசார மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நாட்டில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் அனைத்து அபிவிருத்திகளும் நல்லாட்சியில் தாமதமாக்கப்பட்டிருந்தன .

இந்நிலையில் தற்போது இந்த காலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த கலாசார மண்டபத்தை கட்டுவதற்கு ,

 அன்று யாழ் மாநகரின் முதல்வராக இருந்தபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்தலில் போரினால் சிதைவுற்றிருந்த திறந்த வெளி அரங்கமாக இருந்த  இந்த இடத்தை அன்றைய மாநகரின் உறுப்பினர்களது ஏகோபித்த ஆதரவுடன் வழங்கியிருந்தேன்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. இந்த கட்டடம் இன்னும் சிறிது காலத்தில் எமது மக்களின் பாவனைக்காக வழங்கப்டவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: