அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியில் பங்காளர்களாக மாறுங்கள்: தொல்புரம் மக்களிடம் ஈ.பி.டி.பி. வேட்பாளர் விக்னேஸ் கோரிக்கை!

Friday, July 17th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிக ஆசனங்களுடன் வெற்றி பெறப்போவது உறுதியாகியுள்ள நிலையில் அவரின் வெற்றியின் பங்காளர்களாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மாற வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் விக்னேஸ் அழைப்பு விடுத்துள்ளார்

தொல்புரம் கிழக்கு முன்கோடை பிரதேச மக்களினால் இன்று  ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விதமான கருத்துக் கணிப்புக்களிலும் தென்னிலங்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலமையிலான பொதுஜன பெருமுன அமோக வெற்றி பெறப்போவதை அறுதியிட்டுக் கூறுகின்றன.

அதேபோன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை கைப்பற்றும் என்று கணிப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனவே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வெற்றியில் பங்காளர்களாகி, எதிர்காலத்தில் உரிமையுடன் அவரை நாடி அனைத்து அபிலாசைகளையும் நிறைவேற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றத் தேர்தலில் வீணைக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

Related posts: