அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுனேஸ்வரியின் பூதவுடல் தீயுடன் சங்கமம் !
Monday, June 1st, 2020அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவர்களின் பூதவுடல் இன்றையதினம் தீயினில் சங்கமமானது.
முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது தாயாரான மகேஸ்வரி அவர்களின் சோதரனான இராஜசுந்தரம் அவர்களின் மனைவியாரான சுகுணேஸ்வரி அவர்களின் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து கட்சியின் முக்ககியஸ்தர்கள் பலரும் பூதவுடலுக்கு தமது அஞ்சலிமரியாதைகளை தெரிவித்திருந்தனர்.
மறைந்த அமரர் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரத்தியேக செயலாளரும் சகோதரருமான தயானந்தா அவர்களின் மனைவியார் ரமணி அவர்களின் அன்பு தாயாரது பூதவுடல் கொழும்பு கல்கிஸ்சை மகிந்த மலர்ச்சாலையில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற நிலையில் கல்கிஸ்சை இந்து மயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மலேசியாவை பிறப்பிடமாகவும் தெல்லிப்பழை வறுத்தலை விளானை சேர்ந்தவரும், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி ஆகிய பகுதிகளில் வசித்தவருமான அமரர் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவவர்கள் கொழும்பு பிரான்சிஸ் வீதி வெள்ளவத்தையில் வசித்துவந்த நிலையில் கடந்த 30.05.2020 அன்று தனது 94 வயதில் வயது மூப்பின் காரணமாக காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|