அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் காலமானார்!

Saturday, May 30th, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவர்கள் {30.05.2020} இன்றையதினம் காலமானார்.

அன்னாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது துயரில் பங்கெடுத்துக் கொள்வதுடன் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

முன்பதாக அமரர் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவர்கள் வயது மூப்பின் காரணமாக தனது 93 ஆவது வயதில் இன்றையதினம் காலமானார்.

மறைந்த அமரர் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரத்தியேக செயலாளரும் சகோதரருமான தயானந்தா அவர்களின் மனைவியார் ரமணி அவர்களின் அன்பு தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு கல்கிஸ்சை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெற்று கல்கிஸ்சை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: