அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் மாதர் அமைப்புகளை ஊருவாக்குவிப்பது தொடர்பான வேலைத்திட்டம் அராலியில் முன்னெடுப்பு!

Friday, February 28th, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வறிய மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களுள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வறிய பெண்களது வருமானங்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தில் பெண்கள் தாமாக முன்வந்து கடலுணவு பதனிடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில் சார் பயிற்சிகளை பெற்று குறைந்த முதலீட்டில் அதிக குடும்ப பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டங்களில் ஒன்றான மாதர் அமைப்புகளை ஊருவாக்குவித்து அதனூடாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் அராலி மத்தி ஊரத்தி பகுதியில் குறித்த விடயம் தொடர்பான தெளிவூட்டல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இம்மாதம் 17 ஆம் திகதி குறித்த வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கான மாதர் அமைப்புக்களை கட்டுவது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கடலுணவு பதப்படுத்தில் கடல் உயிரின வளர்ப்பு நன்னீர் உயிரின வளர்ப்பு மற்றும் அதனூடாக மேற்கொள்ளக் கூடிய சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாக விவரணப்படத் தொகுப்பும் அதன் பின்னர் 3 நாள் பயிற்சி பட்டறையும் ஒருதொகுதி மாதர் அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் பல இத்தொழில் துறைசார் பெண்களை இத்திட்டத்தில் இணைத்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் இன்று இந்த பிரதேசத்தின் பெண்கள் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தை அக்கறையுடன் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

அந்தவகையில் உங்களுக்கான பயிற்சிகளும் அதை முன்னெடுப்பதற்கான இலகு கடனுதவி வசதிகளையும் பெற்றுத் தருவதற்கு நாம் முயறசிகளை மேற்கொள்வோம் என்றார்.

இதன்போது கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும் குறித்த திட்டத்தை ஒருங்கிணைப்பு செய்து வருபவருமான சாந்தாதேவி தர்மரடணம் , வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் பிரமுகர்கள் என பலர் உடனிருந்தனர்.

Related posts: