அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அலுவலகத்திற்கு இடம் வழங்கிவைப்பு!

Wednesday, February 26th, 2020

மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அலுவலகம் அமைப்பதற்கு இடம் ஒன்றை பெற்றுத் தருமாறு குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் சங்கம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.

கடந்த நல்லாட்சி காலத்தில் எதுவித ஆயத்தங்களும் இன்றி கடற்றொழிலாளர்களது பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்ட மயிலிட்டி மீன்பிடி இறங்குதுறை இன்றும் பல்வேறு இடர்பாடுகளுடன் இயங்கிவருகின்றது.

இந்நிலையில் பல வருடங்களாக மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தெனி அம்மன் கோவில் வியாபாரி மூலை பருத்தித்துறையில் இயங்கி வந்த குறித்த சங்கத்தின் அலுவலக் மீளவும் மயிலிட்டி இறங்குதுறையில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டுவந்தபோதும் அவர்களுக்கான அலுவலகம் ஒன்றை இப்பிரதேசத்தில் அமைப்பதற்கு கடந்த ஆட்சிக் காலத்தில் இடம் வழங்கப்படாமையால் பெரும் அசௌகரியங்களுடன் தமது கடற்றொழிலை  குறித்த சங்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்தனர்

இந்நிலையில் ஆட்சி மாற்றம் பெற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் கடந்த மாதம் அமைச்சரது பார்வைக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து துரிதகதியில் அவர்களது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

இதன்போது வடக்கு மாகாண கடற்றொழில் மற்றும் நீரியல் வள அதிகாரி சுதாகரன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்னன் கட்சியின் வலி வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர்கள் அன்பு உள்ளிட்டோர் கலந்து அலுவலகத்திற்கான இடத்தை குறித்த கடற்றொழிலாளர் சங்கத்தினரிடம் வழங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: