அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – உடுவில் மகளிர் கல்லூரி ஊடக மாணவர்கள் அறிவியல் நகர் யாழ் பல்கலை வளாகத்துக்கு கல்விச் சுற்றுலா!

Saturday, October 1st, 2022

யா/உடுவில் மகளிர் கல்லூரி ஊடக மாணவர்கள் அறிவியல்நகர் யாழ் பல்கலை வளாகத்துக்கு கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளரும், யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கோடீஸ்வரன் றுஷாங்கனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த சுற்றுலா ஏற்ட்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சுற்றுலாவை மேற்கொண் மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்களின் அனுமதியுடன், அறிவியல்நகரா வளாக பிரதிப் பதிவாளர் ஜெயகுமார் ஏற்பாடுகளை மேற்கொண்டு, பொறியியல்துறை பீடாதிபதி கலாநிதி பிரபாகரன், விவசாய பீடாதிபதி கலாநிதி வசந்தரூபா, தொழிநுட்ப பீடாதிபதி கலாநிதி சிவமதி ஆகியோர் ஒவ்வொரு துறைகள் தொடர்பான பூரண விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கல்வி மற்றும் கைத்தொழில் துறைகளின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள்  கல்விச் சுற்றுலாவை உடனிருந்து வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: