அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – குடிநீர் விநியோகத்தை கிராமம் தழுவியரீதியில் பரவலாக்கம் செய்ய கரைச்சி மாயவனூர் குடிநீர் பாவனையாளர் சங்கம் நடவடிக்கை!

Wednesday, April 10th, 2024

கொள்கலன் மூலமான விநியோகத்தின் மூலம் குடிநீர் விநியோகத்தை கிராமம் தழுவி பரவலாக்கம் செய்யமுடியுமென கரைச்சி மாயவனூர் குடிநீர் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாயவனூர் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதியை மக்கள் பாவனைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து கையளிப்பதற்கான முன்னேற்பாடாக இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய சமுக குடிநீர் விநியோக திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் பொது அமைப்புகள் கலந்துகொண்ட இன்றைய (10) கூட்டத்தில் பெரும்பாலானோர் இக்கருத்தை  வெளியிட்டுள்ளனர்.

சாதாரண குடிநீருக்கும் சுத்திகரிக்கப்பட்ட இக் குடிநீருக்குமான தர  வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாதுள்ள நிலையில் இதுபற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாத நிலமைகளும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட துடன் நடமாடும் சேவை மூலம் இக் குடிநீரை விநியோகிப்பதன் அவசியமும்  இங்கு வலியுறுத்தப்பட்டது.

குறுகிய காலத்தில் விற்பனையை பரவலாக  விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடாக   ஒரு தொகுதி குடிநீர் கொள்கலன்கள் கொள்வனவுக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பாவனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியேற்றப்படும் கழிவுநீரில் பயன் தரு மரங்கள் வளர்ப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்ட அதே சமயம்  பயிர்களை குரங்குகள் நாசம் செய்வதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடாக அவற்றை  விரட்டுவதற்கான துப்பாக்கிகளை வழங்க பொதுமக்கள் இச் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தொற்றா நோய்களையுடைய 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி - 60 வயதுக்கு மேற்பட்டோரு...
எதிர்வரும் திங்கள்முதல் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவி...
அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை...