அமைச்சர் டக்ளஸின் வடக்கு கடற்படுகையை பாதுகாக்கும் முயற்சிக்கு வலிகிழக்கு பிரதேச சபையில் மகத்தான வரவேற்பு!

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலன் சார்ந்த அனைத்து விடயங்களிற்களையும் வரவேற்றுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் அண்மையில் வடபகுதி கடற்பரப்பில் கடலுயிரினங்களின் இனப் பெருக்கத்துக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தமது முமுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்
இன்றையதினம் குறித்த பிரதேச சபையின் மாதாந்தா அமர்வு சபையின் தவிசாளர் தலைமையில் இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சபையின் கவனத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் நிர்வாகப் பொறுப்பாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினருமான ஐங்கரன் இராமநாதனால் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயத்தை வரவேற்ற அனைத்து கட்சியகிளதும் உறுப்பினர்கள் எமது பிரதேச கடடற் றொழிலாளர்களது நலன்களை முன்னிறுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட இந்த முயற்சிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் அதற்கு தமது முழுமையான ஆரவையும் தெரிவித்து சபையில் தீர்மானமும் ஏக ஆதரவுடன் நிறைவேற்றியிருந்தனர்
முன்பதாக சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் கடல் உயிரினங்கள் மற்றும் வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேருந்துகள் இறக்கி விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|