அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து  திக்கம் வடிசாலை ஆய்வுக்கு 9 பேர் கொண்ட விஷேட குழு நியமனம்!

IMG_1502-1024x576-300x169 Tuesday, May 15th, 2018

வடமராட்சி திக்கம் வடிசாலை தொழிற்பாட்டினை மீள ஆரம்பிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழு கொழும்பில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் செயலாளர் ஆகியோருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது குறித்த வடிசாலை மீளியக்கம் தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன் கள ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இதற்கிணங்கவே வடமராட்சி திக்கம் வடிசாலை நிர்வாக முறைமை, பௌதீக வளப் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களினால் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்ட வடிசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சினால் வடிசாலை ஆரம்பிப்பதற்கு ஏதுவான காரணிகளை ஆராய்வதற்கு மூன்று பொறியியலாளர்கள் அடங்கலாக 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வுகளின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வளவு “கள்” உற்பத்தி செய்யப்படுகின்றது. எவ்வளவு தவறணைகளில் கொள்வனவு இடம்பெறுகின்றது. இதற்கு எந்த சக்தியுடைய இயந்திரத்தை வடிசாலையில் பொருத்தலாம். உற்பத்தி எவ்வாறு மேற்கொள்ளலாம் போன்ற விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் வருடாந்த நிதியில் வெட்டு - உள்ள முறைகேடுகளே ...
இலங்கைக்காக ரூ. 97 மில்லியன் தேவைப்படுகிறது - ஷெய்ட் ராட் அல் ஹுஸைன்!
அனைத்து வசதிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் – ஜனாதிபதி
2,750 மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு சீனா நன்கொடை!
இலங்கை வியட்நாமிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!